125 திரையரங்குகளில் அரசியாரின் இறுதிச்சடங்கு
மறைந்த எலிசபெத் அரசியாரின் இறுதிச்சடங்கு நாளை இடம்பெறவுள்ளது. இந்நிலையில் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் பிரிட்டனில் உள்ள சுமார் 125 திரையரங்குகளில் அது ஒளிபரப்பப்படும்.
அந்த மாபெரும் சடங்குபூர்வ நிகழ்வைக் காண பூங்காங்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் திரைகள் அமைக்கப்படும்.
நேரடி ஒளிபரப்பு
வெஸ்ட்மின்ஸ்டர் அப்பே (Westminster Abbey) நடைபெறவிருக்கும் இறுதிச்சடங்கும் அதன் தொடர்பில் லண்டனில் இடம்பெறும் ஊர்வலங்களும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
பிரிட்டனில் நாளை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பிரிட்டிஷ் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் இறுதிச்சடங்கைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.