எரிபொருளுக்கு மீண்டும் QR முறை ; பதிவு செய்வது எப்படி?
வலுசக்தி அமைச்சு அறிவிப்பின்படி, நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகிப்பு இன்று (15) முதல் அமுலுக்கு வருகிறது.
ஏற்கனவே பதிவு செய்தவர்கள், வாகன உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கத்தில் மாற்றம் இல்லாவிட்டால், 2026.03.14 நள்ளிரவு முதல் fuelpass.gov.lk இணையதளத்தில் குறியீட்டை பதிவிறக்கம் (Download) செய்யலாம்.
வாகன உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கத்தில் மாற்றம் ஏற்பட்டவர்கள்: 2026.03.15 காலை 6.00 மணி முதல் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.

வலுசக்தி அமைச்சு அறிவிப்பின்படி, நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகிப்பு இன்று (15) முதல் அமுலுக்கு வருகிறது.
வாகன உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கத்தில் மாற்றம் இல்லாவிட்டால், 2026.03.14 நள்ளிரவு முதல் fuelpass.gov.lk இணையதளத்தில் குறியீட்டை பதிவிறக்கம் (Download) செய்யலாம்.
வாகன உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கத்தில் மாற்றம் ஏற்பட்டவர்கள் 2026.03.15 காலை 6.00 மணி முதல் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.
புதிய வாகனங்கள் மற்றும் முன்பு பதிவு செய்யாதவர்கள்: 2026.03.15 காலை 6.00 மணி முதல் இணையதளத்தில் பதிவு செய்தல் அவசியம்.
வாராந்திர எரிபொருள் ஒதுக்கீடு (லீட்டரில்)
பேருந்துகள்: 60
மோட்டார் சைக்கிள்கள்: 5
வேன்கள்: 40
மோட்டார் வாகனங்கள்: 15
மோட்டார் லொறிகள்: 200
காணி வாகனங்கள்: 25
முச்சக்கர வண்டிகள்: 15
விசேட தேவைக்கான வாகனங்கள்: 40
குவாட்ரிசைக்கிள்கள்: 5
அதேவேளை, நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பேணும் வாகனங்களுக்கு உரிய நிறுவனங்களுடன் இணைந்து விசேட வேலைத்திட்டத்தின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்படும்.