இலங்கைக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்கிய கட்டார்
இலங்கையில் இதய மற்றும் சுவாச நோய்கள் தொடர்பான நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக அத்தியாவசிய மருந்துகளை கட்டார் வழங்கியுள்ளது.
அதன்படி ரூபா 120 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான அத்தியாவசிய மருந்துத் தொகை கட்டார் அரசாங்கம் சுகாதார அமைச்சுக்கு நேற்று (15) அன்பளிப்புச் செய்தது.
நன்றி கூறிய அமைச்சர்
கட்டார் நாட்டினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கையின் சுகாதாரத் துறையை வலுப்படுத்துவதற்காக இவ்வாறான அன்பளிப்புகள் பல வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக கட்டார அரசாங்கத்திற்கு இலங்கையின் சுகாதார அமைச்சராக அரசாங்கத்தின் நன்றிகளை சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
இலங்கை மற்றும் கற்றவர் நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக சர்வதேச உறவு ஒன்று காணப்படுவதாகவும் கட்டார் நாட்டின் இலங்கைக்கான பணிப்பாளர் மஹமூத் அபு கலிபா குறிப்பிட்டார்.
மேலும் , எதிர்காலத்திலும் இலங்கையின் சுகாதாரத் துறையை வலுப்படுத்துவதற்காக இவ்வாறான பங்களிப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.