Fifa world cup; வெளிநாட்டு மக்களுக்கு விருந்தளித்து மகிழும் கத்தார் மக்கள் !
உலககிண்ண கால்பந்தாட்டப்போட்டி கத்தாரின் இடம்பெற்றுவரும் நிலையில், பலநாடுகள் போட்டியில் கலந்துகொண்டுள்ளன. அதுமட்டுமல்லாது கால்பந்தாட்டப்போட்டியை காண்பதற்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் ரசிகர்கள் அங்கு குவிந்துள்ளனர்.
இந்நிலையில் திடீரென முகம் தெரியாத வெளி நாட்டு இரசிகர்களை தன் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்த கத்தார் நாட்டவர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளார்.
கத்தாரில் நடந்துவரும் உலக கோப்பை போட்டியை காண பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கில் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
கால்பந்துபோட்டியால் விழாக்கோலம் பூண்டுள்ள கத்தாரில் அந்நாட்டு மக்கள் தங்கள் வீட்டு வாசலில் நின்று வெளிநாட்டு மக்களுக்கு விருந்தளித்து மகிழும் புகைப்படங்க:ள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இதன்போது அவர்கள் தங்கள் நட்டுக்கு வந்துள்ள வெளிநாட்டவர்களுக்கு பல்வேறு உணவு பொருட்களை வழங்கி மகிழ்ந்து வருவதாக கூறப்ப்டுகின்றது.