தனியார் பேருந்து - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து... இளைஞன் உயிரிழப்பு!
புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றுமொருவர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (06-01-2025) பிற்பகல் சிறாம்பியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் புத்தளம் கருவலகஸ்வெவ பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நபர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாகக் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பில் பேருந்து சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.