முற்றாக நீரில் மூழ்கிய புத்தள பாலம்; மக்களுக்கு எச்சரிக்கை
புத்தளம், எலுவாங்குளம் பகுதியில் கலா ஓயா பாலம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் அந்த பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு புத்தள மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையைம் தெரிவித்துள்ளது.
இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் புத்தளம் எலுவாங்குளம் பகுதியின் கலா ஓயா பாலம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.
இதனால் வில்பத்து சரணாலயத்திற்குச் செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது. அத்துடன் சுற்றுலாப் பயணிகள் வில்பத்து சணாலயத்திற்கு குறித்த பகுதியினூடாக செல்ல வேண்டாமென்று வனஜீவராசிகள் திணைக்களத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் பொதுமக்கள் அங்கு குளிப்பதையும் தவிர்க்குமாறு புத்தள மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.