இவ்வளவு டொலருக்கு மேல் கொண்டு செல்லக்கூடாது ..அதிரடி உத்தரவிட்ட புடின்
வெளிநாடு பயணிக்கும் ரஷ்யர்கள் 10,000 டொலருக்கு மேல் கொண்டு செல்லக்கூடாது என அந்நாட்டு அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்பை பல்வேறு நாடுகள் கண்டித்தும், ரஷ்ய வங்கிகள் மற்றும் ரஷ்ய பொருட்களுடனான பரிவர்த்தனைகளை தடை செய்ததாலும் ரஷ்ய ரூபிள் நாணயம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
ரஷ்யாவிற்கு எலக்ட்ரானிக் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளதால் ரஷ்யாவில் அவற்றின் விலை அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் அதிக அளவில் செல்போன் வாங்குவது சாத்தியமில்லை என்பதால் பலர் ஏற்கனவே செல்போன்களை வாங்கி வருகின்றனர்.
அரசு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்ற அச்சத்தில் பலர் ஏடிஎம்களில் தங்களுடைய சேமிப்பை திரும்பப் பெற்றனர்.