புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் கைதி உயிர்மாய்ப்பு; பழிவாங்கும் ஆன்மா!
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில், தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கொன்றுக்காக யாழ்ப்பாணம் அழைத்துச் சென்றிருந்த நிலையில், அங்குள்ள சிறைச்சாலையில் வைத்து அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க உறுதிப்படுத்தினார்.

உயிரிழந்த இரணடாவது நபர்....
யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 18 வயதுடைய சிவலோகநாதன் வித்யா என்ற பாடசாலை மாணவியை கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 46 வயதான பூபாலசிங்கம் ஜெயகுமார் என்ற கைதியே உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில், விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அதேவேளை யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா என்ற பாடசாலை மாணவியை கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி புபாலசிங்கம் தவகுமார் செந்தில் (37) கடந்த இரு வருடங்க்களின் முன்னார் கண்டி தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ள நிலையில் நிலையில் மற்றுமொருவர் தற்போது உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015 ஆண்டில் , 18 வயதுடைய சிவலோகநாதன் வித்யா கூட்டு வன்புனர்வுக்கு உடபடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .