ஈழத்தமிழரின் புட்டு ; எழுவைதீவு மீனவன் சொன்ன கதை
புட்டுக்கும் ஈழதமிழர்களுக்கும் இருக்கும் உறவு பற்றிய கருத்துக்களை தேசத்தின் மூத்த ஆளுமையாக விழங்கும் சோ. பத்மனாதன் கூறிய விடயங்களை இப்பதிவில் காணலாம்.
இந்த புட்டுக்கதை தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்ட விடயமாவது, யாழ்ப்பாணத்தவரை பொருத்தவரையில் புட்டு இல்லாவிட்டால் நித்திரை வராது என்று சொல்வார்கள்.
பஞ்சம் ஏற்பட்ட காலக்கட்டங்களை மரவள்ளி கிழங்கை இடித்து மாவாக்கி புட்டு செய்து உண்பார்கள் அதனால் தான் மரவள்ளி கிழங்கை பஞ்சந்தாங்கி என்று கூறுவார்களாம்.
அன்றைய காலத்திலிருந்து யாரையும் எதிர்பாராது தங்களுக்கு தேவையானதை சுயமாக செய்து கொள்வார்கள் ஆனால், இன்று எல்லோரும் தொலைப்பேசிக்கு அடிமையாகி விட்டார்கள் என்று கூறியுள்ளார்.
அத்துடன், சுயமாக சிந்திக்கும் காலம் போய், இந்த காலகட்டத்தில் பொம்மைகளை வளர்ப்பது போல் பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்ப்பதாகவும் சுட்டிகாட்டியுள்ளார்.
புட்டுக்கதை தொடர்பில் மேலும் இக்காணொளி மூலம் காணலாம்.