இலங்கையில் வேகமாக பரவும் வைரஸ் ; பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தல்!
நாட்டில் தற்போது பரவிவரும் சிக்குன் குனியா நோய் குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதன்படி, பிரதேச மட்டத்திலும் சிக்குன் குனியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யப்படும் நோயாளர்களைவிட அதிகளவானவர்கள் சமூக மட்டத்தில் காணப்படலாம். நுளம்புகள் மூலமாகவே சிக்குன்குனியா நோய் பரவுகிறது.
சிக்குன் குனியா நோயைப் போன்று டெங்கு நோய் தொடர்பிலும் எதிர்காலத்தில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.
ஆகவே, நுளம்புகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
அதேபோன்று நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக பதிவு செய்யப்பட்ட வைத்தியரை நாடி தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.