ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீதான இலங்கை மக்களின் நம்பிக்கை ; ஆய்வில் வெளியான தகவல்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீதான மக்கள் நம்பிக்கை 75.5% எனவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மீது 29.4% மக்கள் நம்பிக்கை உள்ளது எனவும், மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் நடாத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் அதன் ஆராய்ச்சிப் பிரிவான சமூகக் குறிகாட்டி இணைந்து நடத்திய அண்மைக்கால “ஜனநாயக ஆட்சியில் நம்பிக்கை பற்றிய சுட்டெண்” எனும் மக்கள் கருத்துக்கணிப்பின் முக்கிய விடயங்கள் அடங்கிய அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி நெருக்கடிகள்
அதன்படி, நாட்டில் நிலவும் வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் தனிப்பட்ட நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையும், திருப்தியும் மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே 23 முதல் ஜூன் 18, 2026 வரை, நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 1,240 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஜனாதிபதிக்கு 18–29 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களிடமிருந்து 81.6% என்ற மிக உயர்ந்த பொது அங்கீகாரம் கிடைத்துள்ளது. அத்துடன், கிராமப்புற மக்களில் 76.4% பேர் அவரது செயல்பாடுகளில் திருப்தி வெளியிட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் நாட்டை திறம்பட ஆட்சி செய்யும் என்ற பொதுமக்களின் நம்பிக்கை 62.8% ஆகக் காணப்படுகிறது.