யாழில் அரச பேருந்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை ; வலுக்கும் எதிர்ப்பு
பருத்தித்துறை பகுதியிலிருந்து காலை 8.30 மணிக்கு கேவில் நோக்கி புறப்படும் அரச பேருந்தானது மருதங்கேணியில் 40 நிமிடங்களுக்கு மேலாக தரித்து நிற்பதால் பயணிகள் பாதிப்பு அடைந்துவருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பருத்தித்துறையிலிருந்து கேவில் நோக்கி காலை 8.30 மணிக்கு புறப்படும் அரச பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மருதங்கேணி பகுதிக்கு வருகை தந்து அங்கே 40 நிமிடங்களுக்கு மேலாக மேலதிகமாக தரித்து நிற்கின்றது.

மாணவர்கள் பாதிப்பு
இதனால் உரிய நேரத்துக்கு செல்ல வேண்டிய மக்கள், வேலை ஆட்கள், மாணவர்கள் பாதிப்படைகின்றனர்.
குறித்த அரச பேருந்தானது அதிக நேரம் காத்திருப்பதால் ஏனைய பேருந்துகள் மற்றும் ஆட்டோ சாரதிகள் பாதிப்படைகின்றனர்.
நேரத்தை கடைப்பிடிக்காமல் தான்தோன்றித்தனமாக மக்களை அலைக்கழிக்கும் அரச பேருந்து மீது நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை போக்குவரத்து சபை இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் பயணிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.