PTA விரைவில் ரத்து ; குற்றவாளிகள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம்; ஜனாதிபதி அனுரகுமார அறிவிப்பு
இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த ஆண்டுக்குள், அதாவது இன்னும் சில மாதங்களுக்குள் ரத்து செய்யப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், அடிப்படை சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலும் இந்தச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.

குற்றவாளிகள் தப்பிக்க விடமாட்டோம்
நீண்டகாலமாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் இந்தச் சட்டத்தை நீக்கி, ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் புதிய சட்டக் கட்டமைப்பை உருவாக்குவதே தமது அரசாங்கத்தின் இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்காக மிகவும் வலுவான புதிய சட்டமொன்றை உருவாக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
"உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை நியமிக்கும்போது, கீழமை நீதிமன்றங்களின் கட்டமைப்பு சிதையாத வகையில் அதனை முன்னெடுக்க வேண்டும்.
உயர் நீதிமன்றங்களில் நிலவும் வெற்றிடங்களை மிகக் குறுகிய காலத்திற்குள் நிரப்ப முடியும். அதேபோல், குற்றவாளிகள் அனைவரையும் உரிய முறையில் சட்டத்தின் முன் நிறுத்துவோம். காலத்தின் மணல் மேடுகளால் எதையும் மூடி மறைக்க நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்ரும் ஜனாதிபதி இதன்போது மீலும் தெரிவித்தார்.