நேபாளத்தில் வெடித்த போராட்டங்கள்; பயணத்தை ரத்து செய்த இந்திய விமாங்கள்
நேபாளத்தில் இடம்பெற்ற போராட்டங்களையடுத்து விமான நிலையம் மூடப்பட்டதனால் டெல்லி - காத்மண்டு இடையேயான விமான சேவைகளை எயார் இந்தியா நிறுவனம் இரத்துச் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேபாளத்தில் பதற்றமான சூழல் நிலவுகின்றமையால் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள விமான நிலையம் மூடல்
காத்மண்டுவில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, டெல்லி-காத்மண்டு-டெல்லி வழித்தடத்தில் இயக்கப்படும் AI2231/2232, AI2219/2220, AI217/218 மற்றும் AI211/212 ஆகிய விமானங்கள் இன்று இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பேரிடி; மலசல கூட குழிக்குள் போட்டு அசிட் ஊற்றி .... ஈ.பி.டி.பி முன்னாள் உறுப்பினர் பகீர் தகவல்
அதேவேளை காத்மண்டுவிற்கான விமான சேவையை இண்டிகோ நிறுவனமும் இரத்துச் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.