ரிட் மனுக்களை வாபஸ் பெற்ற போராட்டக்காரர்கள்!
காலி முகத்திடல் போராட்டகாரகளால் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு கோரி தாக்கல் செய்யப்பட்ட ஐந்து ரிட் மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.
கோட்டா கோ கம போராட்டக் களத்தை காலி செய்யவும், அங்கு அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்களை அகற்றவும் பொலிஸாரின் உத்தரவுக்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று காலி முகத்திடல் போராட்டத் தளத்தை காலி செய்ய போராட்டக்காரர்கள் கூட்டாகத் தீர்மானித்ததையடுத்து, ரிட் மனுக்களை வாபஸ் பெறுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், அனைத்து கட்டமைப்புகளையும் அகற்றிவிட்டு, 5ஆம் திகதி மாலை 5 மணிக்குள் அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கொழும்பு கோட்டை பொலிஸார் கடந்த 3ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.