போராட்டகாரர்களிடம் சிக்கி சின்னாபின்னமான பொலிஸ் அதிகாரி!
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் அவர் காயமடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு கங்காராமவிற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது மேலும் கூட்டத்தை கலைக்க பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
Senior DIG Deshabandu Tennakoon assaulted
— NewsWire ?? (@NewsWireLK) May 10, 2022
Details: https://t.co/viU3AyXlCO pic.twitter.com/6IZJ7tmX6a
காலிமுகத்திடலில் நேற்று இடம்பெற்ற கலவரத்தின்போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுடன் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பதிவாகியுள்ளது.
அத்தோடு, தாக்குதலை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
