கொழும்பில் ஆரம்பமானது போராட்டம்! மக்களுடன் கைகோர்த்த அரசியல் கட்சிகள்(Video)
கொழும்பில் தற்போது அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்தப் போராட்டம் மருதானை சுற்றுவட்டப் பகுதியில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
போராட்டம் காரணமாக மருதானை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மக்களுடன் கைகோர்த்த அரசியல் கட்சிகள்
இந்தப் போராட்டத்தில் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா உள்ளிட்டவர்களும் , பொது மக்களும் கலந்துகொண்டுள்ளனர்.
பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் காலி முகத்திடல் போராட்டக் குழுவின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார், படையினர் குவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
கொழும்பில் பதற்றம்; குவிக்கப்பட்ட படையினர்!