9 திகதி போராட்டம்... எம்.பிக்களிடம் ரணில் முன்கூட்டியே தெரிவித்தது என்ன?
மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி இணைந்து நாளை (09-08-2022) நடத்தவுள்ள எதிர்ப்புத் திட்டத்தை இன்று நடைபெற்ற ஆளும் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தின் போது வெளிப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வினவியபோது,
தமக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் ஜே.வி.பி மற்றும் முன்னிலை சோசலிக் கட்சி இணைந்து விஹார மகாதேவி பூங்காவிற்கு வந்து, பின்னர் சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.
பின்னர் கலைந்து செல்வார்கள் என தமக்கு தெரியவந்துள்ளதாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், அவ்வாறு கலைந்து செல்லாவிட்டால் பிரச்சினை ஏற்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டம் இன்னும் முடிவடையவில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி, இது ஒரு அடையாள போராட்டமாகவே மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.