தனமல்வில பாடசாலை மாணவிக்கு நீதிகோரி போராட்டம்
மொனராகலை, தனமல்வில பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் உட்பட 18 பேரும் இன்று (22) வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கோரி வெல்லவாய நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை இந்த போராட்டத்திற்குச் செய்தி சேகரிப்பதற்குச் சென்றிருந்த ஊடகவியலாளர் ஒருவரை இனந்தெரியாத நபரொருவர் தாக்க முயன்றுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
மேலும் குறித்த நபர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை அச்சுறுத்தியுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அந்நபரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.