மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டம்
மின்சாரத் தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று மெழுகுவர்த்தி ஏந்தி, தீபம் ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் செம்மணிச் சந்தியில் இன்று இரவு 8:30 மணியளவில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது. அரசாங்கம் தற்போது நாடு முழுவதும் பல மணிநேர மின்வெட்டுகளை மேற்கொண்டு வரும் நிலையில் மக்களின் அவல நிலையை வெளிப்படுத்தும் வகையில் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான எஸ்.சுகிர்தன், கே.சயந்தன், யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், தமிழ் ஆதரவாளர் தேசியக் கட்சி உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.