புரதம் நிறைந்த உலர் பழங்களில் இத்தனை நன்மைகளா?
புரத சத்தானது ஆனது நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். இது தசை வளர்ச்சிக்கும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. இது தவிர இந்த உலர் பழங்களை நீங்கள் தினசரி எடுத்துக் கொள்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
அவ்வாறு புரதம் நிறைந்த உலர் பழங்கள் எவையென நாம் இங்கு பார்ப்போம்.
பாதாம்
100 கிராம் பாதாமில் 21 கிராம் ப்ரோட்டீன் உள்ளது. பாதாம் ஆனது பல வீடுகளில் விரும்பி சாப்பிடும் உலர் பழங்களில் ஒன்றாகும். அவற்றில் மோனோசேடூரெடட் ஃபாட்ஸ், வைட்டமின் ஈ மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே அவை வயிறு நிரம்பிய உணர்வையும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. மேலும், இந்த உலர் பழமானது உங்கள் மூளையின் செயல்திறனை அதிகரிக்கிறது
வால்நட்ஸ்
100 கிராம் வால்நட்ஸில் 15 கிராம் ப்ரோட்டீன் உள்ளது. வால்நட்ஸ் ஊட்டச்சத்துகளால் நிறைந்தவை மற்றும் ALA (ஆல்ஃபா-லினோலெனிக் ஆசிட்) போன்ற அத்தியாவசிய ஃபாட்டி ஆசிட்களை வழங்குகின்றன. அவை இதய ஆரோக்கியத்திற்கும், குடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கின்றன.
பிஸ்தா
100 கிராம் பிஸ்தாவில் 20 கிராம் ப்ரோட்டீன் உள்ளது. இவை சிறந்த ப்ரோட்டீன் சத்து நிறைந்த உலர்ந்த பழங்களில் ஒன்றாகும். பிஸ்தா ஆனது தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
முந்திரி
100 கிராம் முந்திரியில் 18.22 கிராம் ப்ரோட்டீன் உள்ளது. முந்திரியில் அதிக ப்ரோட்டீன் சத்து மட்டுமின்றி வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் மற்றும் இரத்த சிவப்பணு உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. அதே நேரத்தில் இதய நோய் மற்றும் எடை அதிகரிப்பை தடுக்கவும் உதவுகின்றன.
வேர்க்கடலை
100 கிராம் வேர்க்கடலையில் 25.80 கிராம் ப்ரோட்டீன் உள்ளது. வேர்க்கடலையானது பருப்பு வகையாக இருந்த போதிலும், அதிக ப்ரோட்டீன் சத்து இருப்பதால், அவை பெரும்பாலும் நட்ஸ்களாக வகைப்படுத்தப்படுகின்றன. வேர்க்கடலை, நட்ஸ் வகைகளில் அதிக ப்ரோட்டீன் சத்து கொண்ட உணவாக திகழ்வதால், அவை மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளன. மேலும், அவற்றின் ஊட்டச்சத்து மதிப்புக்காக உடற்பயிற்சி ஆர்வலர்கள் இதனை விரும்பி சாப்பிடுகிறார்கள்.