வெளிநாட்டினரின் பாதுகாப்பு தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபர் முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் உள்ள அனைத்து வெளிநாட்டினரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது குறித்து அனைத்து தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
அறுகம்பேயின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கருத்து வெளியிடும் போதே பதில் பொலிஸ்மா அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தூதரகம் அறுகம்பை சுற்றுலா பகுதி தொடர்பில் விடுத்துள்ள எச்சரிக்கையை அடுத்து பல நாடுகள் இலங்கைக்கான பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளன.
இதன்படி, பிரித்தானியா மற்றும் ரஷ்யா ஆகியன ஏற்கனவே தங்கள் நாட்டுப் பிரஜைகளை இது தொடர்பில அறிவுறுத்தல் விடுத்துள்ள நிலையில், தற்போது நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன.