குரங்குகள் மற்றும் அணில்களிடம் பயிர்களைப் பாதுகாக்க புதிய நடைமுறை
குரங்குகள் மற்றும் அணில்களிடம் இருந்து பயிர் நிலங்களைப் பாதுகாப்பதற்காக விவசாயிகளுக்கு, துப்பாக்கிகளை வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, அநுராதபுர மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு 180 துப்பாக்கிகள் வழங்கப்படவுள்ளதாக, அநுராதபுர மாவட்ட விவசாய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

புதிய திட்டம்
மாவட்ட செயலாளர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
அத்துடன், 50 ,000 இளம் விவசாயிகளை உருவாக்கும் திட்டத்தின் கீழ் இந்த கடன் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அநுராதபுர மாவட்ட விவசாய பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, 28 முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட விவசாயிகளுக்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் 5 மில்லியன் ரூபாய் கடன் வசதிகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.