கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை புனரமைக்க திட்டம்
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை 1.3 பில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்புச் செய்ய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன், இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கான ஏலம் கோரப்பட்டுள்ளதாகவும், 15 மாதங்களுக்குள் திட்டத்தை நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்தத் திட்டம், கோட்டை புகையிரத நிலையத்தை மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய நவீன போக்குவரத்து மையமாக மாற்றும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் , இந்த வருட இறுதிக்குள் வேலைத்திட்ட பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.