சீனாவில் சுட்டெரிக்கும் வெப்பதால் ஏற்பட்ட தடை!
சீனாவில் மின்சாரத் தடையால் 5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் அதிகரித்துள்ள வெப்பநிலையால் மின்சார விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதனால் அங்குள்ள தொழிற்சாலைகளும் வர்த்தகங்களும் மூடப்பட்டுள்ளன.
சிச்சுவான் (Sichuan) மாநிலத்தில் நேற்று (17 ஆகஸ்ட்) வெப்பநிலை 40 டிகிரீ செல்சியஸை எட்டியது.
அத்துடன் வீடுகள், அலுவலகங்கள், கடைத்தொகுதிகள் ஆகியவற்றுக்கு மின்சாரத்தைப் பங்கீட்டு முறையில் விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு
எரிசக்தியை அதிகம் பயன்படுத்தும் உலோக, உரத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், அவற்றின் செயல்பாட்டைக் குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
அதேசமயம் சீனாவில் அதிகரிக்கும் வெப்பநிலையால் பயிர்களின் விளைச்சலும் கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.