பிரியந்த குமார படுகொலை அனைவரும் கைதாகியுள்ளனர்; பாக். அமைச்சர்
பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவதனவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் சௌத்ரி ஃபவாட் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலையை பாகிஸ்தானிலுள்ள அனைவரும் கண்டித்துள்ளதாகவும் அவர் கூறினார். பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மொஹான் விஜேவிக்ரமவுடனான சந்திப்பின் போதே அமைச்சர் ஃபவாட் ஹுசைன் இதனைத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தால் தாம் மிகுந்த வருத்தம் அடைவதாக அவர் கூறினார். பிரியந்த குமார தியவதன படுகொலை தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்தும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் விளக்கமளித்தார்.
இந்தத் துயர சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சியடைவதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
அதேவேளை இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.