நுவரெலியா பந்தய மைதானத்தை தனியார் மயப்படுத்துவதற்கு திட்டம்!
நுவரெலியா பந்தய மைதான ( ரேஸ்கோர்ஸ் )நிர்வாகத்தில் முரண்பாடுகள் அதிகம் ஏற்படுவதால் நுவரெலியா பந்தய மைதானத்தை தனியார் மயமாக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக சுகததாச மைதானத்தின் மத்திய ஊழியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
ராயல் டர்ஃப் கிளப் ரேஸ்கோர்ஸின் நிர்வாக அதிகாரங்களை கையகப்படுத்தியதாகவும், அதனை முறையாக நிர்வகிக்க எட்டு பாதுகாப்புப் பணியாளர்களை நியமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பந்தய மைதானம் தற்போது நுவரெலியா பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாகவும் அம் மைதானத்தில் உயரமான விளையாட்டு வளாகம் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை குதிரைப் பந்தய மைதானத்தின் பராமரிப்புக்காக அரசினால் இதுவரையில் நிதி ஒதுக்கீடு வழங்கபபடவில்லை என ராயல் டர்ஃப் கிளப் (RTF) கூறுகிறது
நுவரெலியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள 82 ஏக்கர் நிலப்பரப்பு - நகரின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாகும்.
எவ்வாறாயினும், 2012 ஆம் ஆண்டிலிருந்து, இந்த நிலம் சுகததாச தேசிய விளையாட்டு வளாக அதிகாரசபையின் கீழ் வந்தது. ஆனால் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியமைக்கு மேலதிகமாக, நுவரெலியா பந்தய மைதானத்தை தனியார் மயமாக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக சுகததாச மைதான மத்திய ஊழியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.