குவைத்திலிருந்து நாட்டை வந்தடைந்த சிறைக்கைதிகள்
குவைத் நாட்டின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இலங்கை கைதிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட அவர்கள் தற்போது வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்கள் போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், அந்நாட்டிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டாவது கைதிகள் குழு இதுவாகும். கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி 32 கைதிகள் கொண்ட குழுவும் இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டது.