சிறைச்சாலை மோதல்; கவலைக்கிடமான நிலையில் 4 அதிகாரிகள்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 4 சிறை அதிகாரிகள், மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது மருத்துவமனையிலிருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை மருத்துவமனை தரப்புக்கள் உறுதிப்படுத்தியுள்ளன. காயமடைந்த அதிகாரிகளின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, விசேட மருத்துவ சிகிச்சை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதுடன் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.