மாணவி மீது கைவைத்த அதிபருக்கு நேர்ந்தகதி!
நுவரெலியா, கொட்டகலை பிரதேசத்தில் மாணவி ஒருவரை துடைப்பத்தால் தாக்கிய பாடசாலை அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அதிபர் பிரதேச வலயக் கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தெரிவித்துள்ளார்.
விழாவிற்கு பணம் வழங்கவில்லை
பாடசாலையின் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை பாடசாலையின் விழாவிற்காக பணம் வழங்காத காரணத்தினால் பாடசாலை அதிபர் தாக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில், சிகிற்சை பெற்றிருந்தார்.
குறித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதிபர் இடமாற்றப்பட்டுள்ளார். தனது சகோதரர் கேட்ட பணத்தை வழங்காததால் அதிபர் தம்மை தகாத வார்த்தைகளால் திட்டியதாக காயமடைந்த மாணவி தெரிவித்திருந்தார்.
பின்னர் தனது சகோதரர் சார்பாக இந்த விவகாரத்தில் தலையிட்டதற்காக தன்னை துடைப்பத்தால் தாக்கியதாக மாணவி கூறியிருந்தார். “அருகில் இருந்த எங்கள் தந்தையிடம் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறிய போதிலும், அவர் என்னை துடைப்பத்தால் அடித்துக் கொண்டே இருந்தார்.
அதுமட்டுமல்லாது வகுப்பறைக்குத் திரும்பிய பிறகும், கத்த வேண்டாம் என்று துடைப்பக் கட்டையால் என்னை அடித்ததாகவும் மாணவி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.