விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதிப் போரில் உயிரிழந்துவிட்டார். எனவே, அவரின் பெயரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதை தமிழ் அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.

உலகில் உள்ள நாடுகளிலும் அகிம்சை வழியிலும், ஆயுத வன்முறை வழியிலும் போரிட்ட தலைவர்களுக்கு தனிச்சிறப்புகள் உண்டு. இருப்பினும் அவர்கள் உயிரிழந்த பின்னரும் தங்கள் மனங்களில் உயிர் வாழ்கின்றார்கள் என்று சிலர் கருதுகின்றார்கள்.
ஆனால், விடுதலைப்புலிகளின் தலைவர் விடயத்தில் அவ்விடயம் சற்று வேறுபாடாக இருக்கின்றது.

இலங்கையில் பிறந்து, இலங்கையில் வாழ்ந்து, இலங்கையில் போரிட்டு மரணித்த அவரை வைத்து உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் தமிழ்த் தலைவர்கள் பிழைப்பு நடத்துகின்றனர்.
இவ்வாறான நிலையில் விடுதலைப்புலிகளின் தலைவர் இறுதிப் போரின்போது உயிரிழந்துவிட்டார். அவரின் பெயரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதை தமிழ் அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.