கோட்டாபய அரசிற்கு ஆப்பு வைக்க முக்கிய ஆலோசனை கூறும் மகிந்தவின் நெருங்கிய நண்பர்
தீர்மானத்தின் மூலம் புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிக்கும் அரசியலமைப்பு அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இருப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 113 ஆசனங்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒருவரே பிரதமராக நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த போதிலும், இவ்வாறானதொரு நிலையில் தனது கருத்து தேவையற்றது என முன்னாள் பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். த
ற்போதைய அரசியலமைப்பு நெருக்கடிக்கு அரசியலமைப்பு ஊடாகவே தீர்வு காணப்பட வேண்டுமெனவும் திரு.சில்வா தெரிவித்தார்.