பாடசாலை மாணவியிடம் அத்து மீறிய பிக்குவின் மோசமான செயல்; பொலிசார் எடுத்த நடவடிக்கை
பாடசாலை மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக , வட்டவளை ரொசெல்ல ஹைதுரி ஆலயத்தின் பிரதமகுரு நேற்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டவளை, ரொசெல்ல ஹைட்ரி கொலனியில் உள்ள 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை விகாரையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அவரது தந்தை வட்டவளை பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது விகாரையின் பிரதமகுருவானால் தான் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக மாணவி தனது தந்தையிடம் கூறியதையடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அத்துடன் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவியை டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் விசேட நீதி வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தி வைத்திய அறிக்கை பெற்றுக்கொள்ளவுள்ளதாக கூறிய பொலிஸார், கைதான பிக்குவை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.