பேக்கரி பொருட்களின் விலைகள் தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை!
நாட்டில், எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டாலும் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இலங்கையில், 75 சதவீதமான பேக்கரி உற்பத்தியாளர்கள் டீசல், விறகு மற்றும் மின்சாரத்தைப் பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் ஒப்பிடும் போது கோதுமை மா, நல்லெண்ணெய், ஈஸ்ட் மற்றும் முட்டையின் விலைகள் குறைந்தால் மட்டுமே எதிர்காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டொலரின் பெறுமதி அதிகரிக்கும் எனக் கூறி கோதுமை மா மற்றும் ஏனைய பொருட்களின் விலைகளை அதிகரிப்பது போன்று, டொலரின் பெறுமதி குறையும் போது அந்த நிறுவனங்களும் தமது விலைகளை குறைக்குமாறு கோரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.