இதுவே முதல்முறை: மட்டக்களப்பில் முஸ்லீம் சட்டதரணி ஒருவரின் செயல்!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடாத்தினார்கள் என கடந்த ஆண்டு மட்டக்களப்பு கிரான் பகுதியில் கைது செய்யப்பட்ட 10 பேரும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த வழக்கினை முன்னெடுத்த சட்டத்தரணி ரம்ஷீன் என்ற ( Ramzeen 0771151031) மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவராகும்.
ஆரம்பத்தில் சட்டத்தரணி சுகாஸ் இந்த வழக்கை கையில் எடுத்து பின்னர் அவர்கள் இடையில் விட்டுச் சென்றதன் பின்னர் ரம்ஷீன் என்ற சட்டத்தரணி ஊடாகவே இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது.
ரம்ஷினிடம் தான் நேற்று நீதிபதி மோசன் போடுமாறு கூறி இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. எனவே ஊடகவியலாளர்கள் உண்மைச் செய்திகளை வெளியிட வேண்டும்.

நாளை பிணையில் விடுதலை ஆகும் பத்து பேரிடம் கேட்டால் இதன் உண்மை தெரிய வரும். வழக்கை நடாத்திய சட்டத்தரணியின் போன் நம்பர் உள்ளது ஊடகவியலாளர்கள் அவரை தொடர்பு கொண்டு உண்மையை அறிந்து கொள்ள முடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இது வரை எந்த தமிழ் சட்டத்தரணிகளும் பயங்கரவாத தடைச் சட்ட வழக்குகளுக்கு ஆஜராக முன்வராத நிலையில். முதல் முறையாக முஸ்லீம் சட்டதரணி ஒருவர் ஆஜர் ஆகி பிணை பெற்றுக் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஊடகவியலாளர் கோகுலதாசனின் வழக்கு மற்றும் முகநூலில் பதிவிட்டவர்களின் வழக்குகளும் இவரின் ஊடாக முன்னெடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஊடகங்கள் உண்மை செய்திகளை பிரசுரிக்குமாறு சம்பந்தப்பட்டவர்கள் கோரியுள்ளனர்.