ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் யார்? வெளியான முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவு செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த அறிவிப்பு நாளை (08-08-2024) காலை 10 மணியளவில் வெளியிடப்படவுள்ளதாகத் தமிழ் பொது வேட்பாளரைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகளுடன் தொடர்புள்ள ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான யோசனை சில தமிழ்க் கட்சிகளாலும், சிவில் சமூக அமைப்புகளாலும் முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழ் பொது வேட்பாளராகக் களமிறக்குவதற்காக பல பெயர்கள் கடந்த கூட்டங்களின் போது பரிசீலிக்கப்பட்டிருந்தன.
குறித்த கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் கே.வி. தவராசா ஆகியோரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டிருந்தன.
இதனையடுத்து, இறுதியாக தமிழ்ப் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.