நள்ளிரவில் பிக்குவை சந்திக்க ரகசியமாக சென்ற ஜனாதிபதி!
அண்மைய காலங்களாக அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வரும் எல்லே குணவன்ச தேரரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீரென நேரில் சென்று சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பு நேற்று முன்தினம் நள்ளிரவில் கொழும்பில் உள்ள அவரது விகாரையில் இடம்பெற்றது. சுமார் இரண்டரை மணிநேரம் நடந்த இந்த சந்திப்பில் நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை பற்றி பேசப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்து நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனுவை கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் மனுதாரராக எல்லே குணவன்ச தேரரும் சேர்ந்தே தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.