அமைச்சர்களை கடிந்துகொண்ட ஜனாதிபதி; கடும் கண்டனம்
வாழ்க்கை செலவு அதிகரித்து வரும் வேளையில் தேவையற்ற அரசசெலவீனங்கள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அரசாங்கம் அனுபவிக்கதொடங்கியுள்ளது.
இந்த நிலையில் அமைச்சுகள் தேவையற்ற விதத்தில் பயன்படுத்தும் வாகனங்கள் உட்பட அரசாங்கத்தின் அனாவசிய செலவுகளை குறைக்குமாறு அமைச்சரவைக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நேற்யை அமைச்சரவை கூட்டத்தில் அதிகரித்துவரும் வாழ்க்கை செலவு குறித்து ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது பொதுமக்கள் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளதால் ஏற்பட்ட சுமையை அனுபவிப்பதால் அமைச்சர்கள் தேவையற்ற செலவுகளை குறைக்கவேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.