ஜனாதிபதியின் பயண செலவுகள் சபையில் வெளியானது
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்காகச் செலவிட்ட நிதித் தொகை தொடர்பான விபரங்களை அரசாங்கக் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்று (15) நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

பயணங்களின் செலவீனம்
தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க 2024 டிசம்பர் முதல் 2025 செப்டெம்பர் மாதம் வரை 8 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதுடன், அதற்காக 14.9 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணங்களின் செலவீனமாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முதல் ஒன்பது மாதங்களில் 3.6 மில்லியன் ரூபாயினை மாத்திரமே செலவிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், எரிபொருள் கொடுப்பனவாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க 140 மில்லியன் ரூபாயையும் செலவிட்டுள்ளனர்.