முக்கிய நாட்டிற்கு பறக்கும் ஜனாதிபதி ரணில்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை எகிப்தில் நடைபெறவுள்ள COP 27 மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்த மாநாட்டில் மூன்றாம் சார்லஸ் மன்னர்(King Charles III) பங்கேற்பது முக்கியத்துவம் வாய்ந்தது என ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.
COP 27 மாநாட்டில் பங்குபற்றுவதற்கு மூன்றாம் சார்லஸ் மன்னர்(King Charles III) தீர்மானித்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சர்வதேச ஆலோசகராக நோர்வேயின் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் எரிக் சொல்ஹெய்மை(Eric Solheim) ஜனாதிபதி அண்மையில் நியமித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.