ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பினார்
ஜேர்மனுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கால உலக அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு தீர்வுகாண்பதற்கான உயர்மட்ட முன்னெடுப்பான “பேர்லின் குளோபல்” மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த புதன்கிழமை அதிகாலை ஜேர்மனுக்கு பயணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகளின் தலைவர்களின் பங்கேற்புடன் இந்த மாநாடு செப்டெம்பர் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் ஜேர்மனியின் பேர்லின் நகரில் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் அம் மாநாடு நிறைவடைந்ததை அடுத்து தமது ஜேர்மன் விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.