இழுத்தடிக்கும் ஜனாதிபதி ரணில்; 10 பேர் எதிரணிக்கு தாவல்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சுப் பதவி வழங்காமல் இழுத்தடித்து வருவதால் அந்தப் பதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மொட்டுக் கட்சி எம்.பிக்கள் 10 பேர் அதிருப்தியடைந்துள்ளனர்.
இதனால் அதிருப்தியடைந்த அவர்கள் எதிரணி வரிசையில் அமர்வதற்குத் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.
அரச கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை
அவ்வாறு எதிரணி வரிசையில் அமர்ந்தாலும் அவர்கள் மொட்டுக் கட்சி உறுப்பினர்களாகவே இருப்பார்கள் என்றும், அரச எம்.பிக்களின் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை என்றும் அவர்கள் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச 10 பேர் கொண்ட பெயர்ப்பட்டியலை ரணிலிடம் ஒப்படைத்து அவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்குமாறு கேட்டு பல மாதங்களாகியுள்ளன.
எனினும் ஜனாதிபதி , ரணில் இதோ தருகின்றேன், தருகின்றேன் என்றே இழுத்தடிப்பதால் இவர்கள் இப்போது ஆத்திரமடைந்துள்தாகவும் கூறப்படுகின்றது.