டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் அளித்த உறுதி!
இலங்கையை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்லும் பணி துரிதப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe உறுதியளித்துள்ளார்.
நேற்றைய தினம் வியாழக்கிழமை (18-05-2023) கொழும்பு 08 அல்விட்டிகல மாவத்தையில் அமைந்துள்ள தராஸ் தலைமையகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவது தொடர்பான அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொறுப்பான இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், டிஜிட்டல் மற்றும் பசுமை பொருளாதாரம் ஆகியவற்றை ஒன்றாக மேம்படுத்துவதற்கு இளைஞர்களின் பரிந்துரைகளை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.