மறைந்த நடிகருக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி ரணில்(Photos)
இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன தர்மராஜின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ஜனாதிபதி ரணிலுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பார் ஆனந்தகுமாரும் தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.
திடீர் சுகயீனம்
41 வயதான தர்ஷன் தர்மராஜ் நேற்று காலை திடீர் சுகயீனம் காரணமாக காலமானார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது அவரது உடல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் தர்ஷன் தர்மராஜ், சரோஜா, பிரபாகரன், மச்சாங், மாதா, இனி அவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள தர்ஷன் பல சின்னத்திரை நாடகங்களிலும் நடித்துள்ளார்.திடீர் சுகயீனமுற்ற நிலையில் சனிக்கிழமை (02) இரவு நடிகர் தர்ஷன தர்மராஜ் காலமானார்.
இந்நிலையில் அன்னாரின் பூதவுடல் இறக்குவானையில் நாளை (04) நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.