கோட்டாவை தேடிச் சென்ற ஜனாதிபதி! மீண்டும் வெடிக்குமா போராட்டம்
தாய்லாந்தில் இருந்து இதும்பிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பில் உள்ள அரசு பங்களாவில் தங்கி உள்ளார்.
பொதுமக்கள் போராட்டத்தை நாட்டைவிட்டு வெளியேறிய அவர் நாடு திரும்பிய நிலையில் , மீண்டும் மக்கள் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்கும் வகையில் பங்களாவை சுற்றி பாதுகாப்புக்காக இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் அவரை பாதுகாக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
கோட்டா - ரணில் சந்திப்பு
இதற்கிடையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோட்டாபய ராஜபக்ஷ வீட்டுக்கு நேற்று (11) நேரில் சென்று அவரை சந்தித்தார். அப்போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம், பொருளாதார நெருக்கடி சூழல் குறித்து இருவரும் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இலங்கையில் விரைவில் 12 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ஷவுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
போராட்டம் வெடிக்கலாம்
இந்த சூழ்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பேசி உள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் மீண்டும் இலங்கையில் ராஜபக்ஷ குடும்பத்தினரின் ஆதிக்கம் தலை தூக்கலாம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதனால் பொது மக்கள் மறுபடியும் போராட்டம் நடத்தலாம் என்ற நிலை உருவாகி உள்ளதாக கூறப்படுகின்றது.