அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட ஜனாதிபதி ரணில்!
இன்றைய தினம் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) இன்று மாலை கொழும்பு கொள்ளுபிட்டிய கங்காராம விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க,
தற்போதைய நடைமுறையில் மாற்றம் வேண்டும் என போராட்டத்தில் கோரிக்கை விடப்படுகிறது.
அனைத்து துறைகளிலும் மாற்றம் தேவை என அவர்கள் கூறுகின்றனர்.
அமைதியாக கருத்துக்களை வெளியிட அவர்களுக்கு சந்தர்ப்பம் இருக்க வேண்டும் அதற்கு நாம் சந்தர்ப்பம் வழங்க வேண்டும். நாமும் அதற்கு பதிலளிக்க சந்தர்ப்பம் இருக்க வேண்டும்.
அமைதியாக இருப்போரின் கருத்துக்களை ஏற்று நாம் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் ஆனால் இதற்குள் மறைந்து ஆட்சியை கவிழ்க்க வீடுகளுக்கு தீவைக்க ஜனாதிபதி செயலகம் பிரதமர் அலுவலகத்தை கைப்பற்ற இடமளிக்க முடியாது.
அது ஜனநாயகம் அல்ல அது ஜனநாயகத்திற்கு விரோதமானது அவர்களுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.