சற்றுமுன்னர் யாழ். விமான நிலையம் வந்தடைந்தார் ஜனாதிபதி ரணில்!
யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல் விழா கொண்டாட்டத்தினை ஏற்பாடு செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) இன்றைய தினம் (15-01-2023) யாழிற்கு விஜயம் செய்துள்ளார்.
]
இந்நிலையில் சற்றுமுன்னர் யாழ்.பலாலி விமான நிலையத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வந்தடைந்துள்ளார்.
அதன்பின், நாகவிகாரைக்குச் சென்று, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை (Douglas Devananda) சந்திக்கவுள்ளார்.
மதியம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு, துர்க்கா தேவி மண்டபத்தில் 3.00 மணியளவில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.
அதைதொடர்ந்து கச்சேரியில் காணி விடுவிப்புத் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார் எனத் தெரியவருகின்றது.