உலகின் அதிமுக்கிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட உக்ரைன் அதிபரின் பெயர்!
2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy)க்கு வழங்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் காரணமாக, அமைதிக்கான நோபல் பரிசை வழங்குவதற்கான நடைமுறையை மார்ச் 31ஆம் திகதி வரை நீட்டிக்க நோர்வே நோபல் குழுவிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மார்ச் 11ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில், "அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரைக்கான நடைமுறையை மார்ச் 31, 2022 வரை நீட்டித்து, அதன் மூலம் அதிபர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy)க்கும் உக்ரைன் மக்களுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரைக்கப்படுவதை அனுமதிக்க வேண்டும் என நோபல் குழுவை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நோபல் பரிசு வெற்றியாளர்கள் குறித்த அறிவிப்பு அக்டோபர் 3 தொடங்கி 10 ஆம் திகதி வரை வெளியிடப்படும். 2022ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு 251 தனிநபர்களும் 92 அமைப்புகளும் விண்ணப்பித்துள்ளன.