அரைமணிநேரம் இடம்பெற்ற ஜனாதிபதி கோட்டாபய -ஷிங்க்லா சந்திப்பு
இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹரடஷவர்தன் ஷிங்க்லா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பானது சுமார் அரை மணிநேரத்திற்கும் அதிகமாக இடம்பெற்றதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான உயர்ஸ்தானிகர், ஜனாதிபதி செயலாளர், ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
எனினும் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
இதேவேளை இலங்கைக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு இந்திய இராஜாங்க செயலாளர் இன்று மாலை நாடு திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.