கோட்டாபயவை சந்தித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்! ழுழு விபரங்கள்
இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் கடல்சார் துறைகளின் முன்னேற்றத்திற்கு தமது நாடு ஆதரவளிக்கும் என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி ( David Holly) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (04-07-2022) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் (Gotabaya Rajapaksa) இடம்பெற்ற சந்திப்பில் உயர்ஸ்தானிகர் ஹோலி இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மிகவும் சவாலான பொருளாதார நெருக்கடியை அவுஸ்திரேலியா நன்கு அறிந்துள்ளது.
அவுஸ்திரேலியா 50 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு ஒரு நாடு வழங்கிய அதிகூடிய மனிதாபிமான உதவித் தொகையாக வழங்கியது. இது ஆரம்பம் என்று குறிப்பிட்ட அவர், ஏனைய துறைகளிலும் இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார்.
மேலும், கடல்சார் பிரச்சினைகள் மற்றும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான புரிந்துணர்வுகளை வலுப்படுத்துவதற்காக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இலங்கையில் அவுஸ்திரேலிய முதலீட்டை ஊக்குவிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
Had a productive meeting with @AusHCSriLanka HC David Holly today. Synergy of Naval Ops incl the issue of illegal immigrants & attracting Aus investors was extensively discussed. My hope is that our bilateral partnership blossoms as Australia has always been a faithful friend. pic.twitter.com/FPbJYjny1R
— Gotabaya Rajapaksa (@GotabayaR) July 4, 2022
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான கடந்த 75 வருட இராஜதந்திர உறவுகளின் போது இலங்கையுடன் அவுஸ்திரேலியாவின் நெருக்கமான ஒத்துழைப்பை ஜனாதிபதி பாராட்டினார்.